search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேர்வலாறு அணை"

    பாபநாசம், சேர்வலாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளில் மட்டும் பிசான சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உள்ளது.
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்தாலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யவில்லை.

    கடந்த மாதம் ஒரே நாளில் பாபநாசம் அணைப்பகுதியில் மட்டும் 27 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் பாபநாசம் அணை, சேர்வலாறு அணை ஆகியவை ஒரேநாளில் 23 அடி நீர்மட்டம் உயர்ந்தது. இதன் காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகள் மட்டும் நிரம்பும் நிலையை அடைந்துள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் மிகப்பெரிய அணையான மணிமுத்தாறு அணையின் முழுகொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடியாகும். இங்கு தற்போது 2,630 மில்லியன் கனஅடி தண்ணீரே உள்ளது.

    அதாவது 50 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் தற்போது 86 அடி நீர்மட்டம் உள்ளது. 90 அடிக்கு பிறகே மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதி அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது மணிமுத்தாறு அணைக்கு மிகவும் குறைந்த அளவாக விநாடிக்கு 62 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது.

    நெல்லை மாவட்டத்தின் சிறிய அணையான வடக்கு பச்சையாறு அணையின் உச்சநீர்மட்டம் 50 அடியாகும். அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக நீர்மட்டம் 22 அடியாக உள்ளது. ஆனால் அதன்பிறகு மழை இல்லாததால் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் அணை நீர்மட்டம் தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கிறது.

    இதுபோல நம்பியாறு அணையும், உச்சநீர்மட்டம் 22.96 அடியாகும். அங்கு 11.64 அடியே நீர்மட்டம் உள்ளது. அந்த அணைக்கும் தற்போது பெய்த மழையினால் தண்ணீர் வரத்து இல்லை. இன்றுதான் மிகவும் குறைந்த அளவு தண்ணீர் அந்த அணைக்கு செல்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் 6 அணைகள் உள்ளன. இதில் மேற்கண்ட 3 அணைகளில் விவசாயத்திற்கு தேவையான போதிய தண்ணீர் இன்னும் வரவில்லை. பாபநாசம், சேர்வலாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளில் மட்டும் பிசான சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    அடவிநயினார்-32, கடனாநதி-7, பாபநாசம்-6, சிவகிரி-6, கொடுமுடியாறு-5, ராதாபுரம்-4, கருப் பாநதி-3, தென்காசி-1, சாத்தான்குளம்-3.2.

    நீர்பிடிப்பு பகுதிகளில் இரவு பெய்த மழையினால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயர்ந்து இன்று காலை 74.31 அடியாக உயர்ந்துள்ளது. #ServalarDam
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் வெயில் அடித்தது. பின்னர் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.

    சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. குறிப்பாக ஆய்க்குடி, தென்காசி, சேர்வலாறு, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தென்காசியை அடுத்த ஆய்க்குடி பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மழைக்காக அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ஒதுங்கி நின்ற ஆனந்த் என்பவர் மின்னல் தாக்கி காயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதே பகுதியில் மின்னல் தாக்கி 3 ஆடுகள் பலியாயின.

    தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. வெப்பம் தணிந்து குளிர்ந்த கால நிலை நிலவியது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையினால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளன. ஏற்கனவே தென்மேற்கு பருவ மழையினால் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணை உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால் தற்போது இந்த அணைகளில் கணிசமான அளவு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு கூடுதலாக தண்ணீர் வருகிறது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 104.40 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 647 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. சேர்வலாறு அணை பராமரிப்பு பணிக்காக நீர்மட்டம் வேகமாக குறைக்கப்பட்டது. தற்போது அணைப்பகுதியில் மழை பெய்து வருவதால் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்த அணை நீர்மட்டம் 51.34 அடியாக இருந்தது.

    இரவு பெய்த மழையினால் இந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயர்ந்து இன்று காலை 74.31 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.80 அடியாகவும், கடனா அணை நீர்மட்டம் 66 அடியாகவும், ராமநதி அணை 59.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.53 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 86.75 அடியாகவும் உள்ளன. குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பிய நிலையில் உள்ளது.

    குற்றாலம் மலைப்பகுதியில் நேற்று கன மழை பெய்த‌து. இதனால் நேற்று மாலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது. ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்னீர் அதிகளவு விழுந்தது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இன்று காலை மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் குறைந்தது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே புஷ்கர விழாவுக்காக நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ள வெளி மாநில பக்தர்கள் குற்றாலத்திலும் குளிக்க குவிந்துள்ளனர்.

    சங்கரன்கோவில் பகுதியில் நேற்று பெய்த கன மழையினால் அங்குள்ள தனியார் பள்ளியில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து மாணவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மழைநீர் வடிந்ததையடுத்து வகுப்புகள் நடந்தன.



    தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் நேற்று மதியம் கன மழை பெய்தது. கயத்தாறில் பெய்த கன மழையினால் அங்குள்ள உப்பாற்று ஓடையில் அதிகளவு தண்ணீர் சென்றது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    ஆய்க்குடி-37.2, கயத்தாறு-35, சேர்வலாறு-28, தென்காசி 25.8, பாபநாசம்-22, சங்கரன்கோவில்-21, கோவில்பட்டி-11, மணிமுத்தாறு-8.8, கடனா அணை 8.2, சிவகிரி-7, அம்பை-6.6, கருப்பாநதி-6, செங்கோட்டை-5, ராமநதி அணை-4, குண்டாறு-3, அடவிநயினார் அணை-2, பாளை-2. #ServalarDam
    கடந்த 2 நாட்களில் சேர்வலாறு அணையில் மட்டும் 16 அடி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பழுதுபார்க்க குறைக்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் தெரியவில்லை.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பு நிலையை விட அதிக அளவு பெய்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் 9 அணைகள் நிரம்பின. இதைத்தொடர்ந்து பிரதான கால்வாய்களின் நேரடி பாசன விவசாயம் நடைபெற்று வருகிறது.

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கும். ஆனால் ஆவணி இறுதியிலேயே நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத்தொடங்கி விட்டது. கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே சாரல்மழை பெய்தது. நேற்று நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழையும் மிதமான மழையும் பெய்தது.

    கொடுமுடியாறு பகுதியில் அதிகபட்சமாக 45 மில்லிமீட்டரும் அம்பையில் 28 மில்லிமீட்டர் மழையும் பாபநாசத்தில் 20 மில்லிமீட்டர் மழையும் சேரன்மகாதேவியில் 16 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது. மற்ற இடங்களில் குறைந்த அளவு மழை பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 672 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பாசன கால்வாயில் வினாடிக்கு 20 கனஅடி தண்ணீரும், கீழ்அணையில் இருந்து ஆற்றில் 1004 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 105.50 அடியாக இருந்தது. அது இன்று சற்று உயர்ந்து 106 அடியாக அதிகரித்துள்ளது.

    ஆனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 99 அடியாக இருந்தது. அது நேற்று 91.70 அடியாக குறைந்தது. இன்று மேலும் குறைந்து 84.91 அடியாக உள்ளது. கடந்த 2 நாட்களில் சேர்வலாறு அணையில் மட்டும் 16 அடி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பழுதுபார்க்க குறைக்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் தெரியவில்லை.

    மணிமுத்தாறு அணையில் 84.95 அடியும், கடனாநதியில் 68.80 அடியும், ராமநதி 55.25, கருப்பாநிதி-58.89, குண்டாறு-33.38, வடக்கு பச்சையாறு -20, நம்பியாறு-20, கொடுமுடியாறு-37.50, அடவிநயினார்-97.75 அடியாகவும் உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த ஒரு நாள் மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    அம்பை - 28.4
    சேரன்மாதேவி - 15.8
    மணிமுத்தாறு - 14.4
    பாளை - 4.2
    நெல்லை - 3.2
    ராதாபுரம் - 2.2
    சிவகிரி - 1
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளதால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்துள்ளது. #Servalardam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பு நிலையை விட சற்று அதிகமாகவே பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களாக மழை இல்லாமல் அணைகளுக்கு வரும் தண்ணீர் குறைந்தது.

    இந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. அதிகபட்சமாக செங்கோட்டை மலைப்பகுதியில் உள்ள அடவிநயினார் அணைப்பகுதியில் 50 மில்லிமீட்டரும், குண்டாறு அணைப்பகுதியில் 45 மில்லிமீட்டரும் பெய்துள்ளது. பாபநாசம் அணைப்பகுதியில் 21 மில்லிமீட்டர் மழையும், செங்கோட்டை நகரப்பகுதியில் 21 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது. அம்பையில் 26 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகாரித்துள்ளது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 33 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 110 அடியாக இருந்தது. ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 112.25 அடியாக உயர்ந்துள்ளது.

    பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீர் சேர்வலாறு அணைக்கு திருப்பி விடப்படுகிறது. இதனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 114.83 அடியில் இருந்து, ஒரே நாளில் 9 அடி உயர்ந்து இன்று காலை 123.23 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 173 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 71.65 அடியாக உள்ளது. கடனா நதியின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து இன்று 83.50 அடியாகவும், ராமநதியின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து இன்று 75.25 அடியாகவும் உள்ளது.

    அடவிநயினார் அணைக்கு வினாடிக்கு 118 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று காலை 126 அடியாக உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வருகிறது. கொடுமுடியாறு அணையில் 41 அடி நீர்மட்டம் உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலைவரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    அடவிநயினார்- 50
    குண்டாறு - 45
    அம்பை - 26
    பாபநாசம் - 21
    செங்கோட்டை - 21
    ராதாபுரம் - 21
    சிவகிரி - 13
    மணிமுத்தாறு - 11
    தென்காசி - 11
    ஆய்குடி - 9.6
    சேர்வலாறு - 9
    சேரன்மாதேவி - 7
    கொடுமுடியாறு - 7
    கருப்பாநதி - 5
    ராமநதி - 3
    கடனாநதி - 2
    நெல்லை - 1 #Servalardam
    ×